Breaking News

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவினால் யாழ் மாவட்டத்தில் பல அபிவிருத்தித்திட்டங்கள் பொது மக்களிடம் கையளிப்பு.


சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

இந்த விஜயத்தின் போது தனது அமைச்சுக்கு உட்பட்ட பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை பொது மக்களின் பயன்பாட்டுக்காக பொதுமக்களிடம் கையளித்தார். 

யாழ். போதனா வைத்தியசாலையில், அமைக்கப்பட்டுள்ள அரச மருந்தகம் (ஒசுசல) கிளையொன்று அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்.டது.

530 மில்லியன் ரூபா நிதி உதவியில் யாழ். போதனா வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கான அடிக்கல்லையும் அமைச்சர் நாட்டி வைத்தார்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் 600 மில்லியன் ரூபா செலவில் பணிபுரியும் தாதியர்களுக்கான தங்குமிடம் விடுதியினை திறந்து வைத்த அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தார்.

சுகாதார போசாக்கு மற்றும் சுதேச மருத்துவம் அமைச்சின் பிரதி அமைச்சர் பைசல் காசிம் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஈஸ்வரபாதம் சரவணபவன் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வடமாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் வடமாகாண சபை உறுப்பினர்களான கே. சிவாஜிலிங்கம் கே. சயந்தன் மத குருமார் குவைத் நாட்டின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments