Breaking News

பொலிஸ் அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்கப்போவதில்லை என அரசாங்கம் வலியுறுத்தல்



சமகால அரசாங்கம் பொலிஸ் அதிகாரங்களை படையினருக்கு வழங்க மாட்டாது என பிரதியமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.


குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ் அதிகாரங்கள் முப்படையினருக்கு வழங்கப்படவுள்ளதாக கூறுகிறார்.

இந்தக் கருத்தில் எதுவித உண்மையும் கிடையாது என பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

ராஜபக்ஷ குடும்பத்தவர்கள் தமது ஆட்சிக்காலத்தில் பொலிஸ் அதிகாரங்களை மாத்திரமன்றி இராணுவ அதிகாரங்களையும் முறைகேடாக பயன்படுத்தினார்கள்.


சமகால அரசாங்கமே பொலிசாருக்கு உரிய அதிகாரங்களை வழங்கியதாக பிரதியமைச்சர் நலின் பண்டார மேலும் தெரிவித்தார்.

No comments