Breaking News

வட்டுக்கோட்டையில் அதிகார துஷ்பிரயோகம் - எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் அதிகார துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக தெரிவித்து  இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

கல்லூரி முன்றலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் உ ள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனது.அமைதி வழியில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின் நிறைவில் யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் டேவிட் சதானந்தன் சொலமனிடம் மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.

தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் தியாகராஜா, ஆளுநர் சபையில் ஜனநாயகத்தை பேணாமல் செயற்படுவதாக தெரிவித்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆளுநர் சபையின் தலைவர் பேராயர் டானியல் தியாகராஜாவும், சபையின் உப தலைவரான சட்டத்தரணி செல்வி விஜுலா அருளானந்தமும் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில்,யாழ்ப்பாண கல்லூரி அதிபரின் சுயாதீனத்துக்கும் பதவி நிலைக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கீழ் நிலை பதவிகளில் உள்ள சிலர் அண்மைக்காலமாக செயற்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர் .

இதனையடுத்து யாழ்ப்பாண கல்லூரியின் 150 ஆண்டு கால பாரம்பரியத்தையும் விழுமியங்களையும் பாதுகாப்போம் என பழைய மாணவர்களும் பெற்றோர்களும் நலன்விரும்பிகளும் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்கார்கள் தெரிவித்துள்ளனர்.

No comments