Breaking News

ஊடகங்களை எச்சரிக்கும் ஜனாதிபதி



தனியார் ஊடகங்கள் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, வழங்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்து இறுதியில் கண்ணீர் சிந்தவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மொரக்காஹந்த நீர்தேக்க நிர்மாண நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களையே ஊடகங்கள் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து தான் கவலையடைவதாக தெரிவித்த ஜனாதிபதி, 

உண்மைகளை பேசுவதற்காகவே ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


ஆயிரக்கணக்கான இடையூறுகளுக்கு மத்தியில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி 5 வருடங்களுக்கு பின்னர் சீன அரசாங்கத்திடமிருந்து மொரகஹந்த நீர் தேக்கத்திற்காக நிதியுதவிகளை பெற்றதாகவும் இதன் போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments