Breaking News

வடக்கில் புலிகளின் எழுச்சி முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் தேவை - அனுரகுமார திஸாநாயக்க

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புலி க்கான பட முடிவுமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இனவாதத்தை பரப்பி மீண்டும் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



ஹட்டன் - கொட்டகலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்ற மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் இளைஞர் முன்னணியின் மாநாட்டில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


மகிந்த தரப்பு மீண்டும் இனவாதத்தை பரப்பி வருகிறது. இனவாதம் மட்டுமே அவர்களின் போராட்ட கோஷமாக இருக்கின்றது.

கொள்ளையடிப்பதை நிறுத்துங்கள் என்று மகிந்த தரப்பினரால் கூற முடியாது. வீண் விரயத்தை நிறுத்துங்கள் என்றும் அவர்களால் கூற முடியாது. சமாதானத்தை கொண்டு வாருங்கள் என்றும் அவர்களால் கூற முடியாது.

மகிந்த தரப்பினரால் ஒன்றையே கூறமுடியும் அது என்ன?. வடக்கில் புலிகள் எழுச்சிப் பெற்று விட்டனர் என்ற ஒன்றையே அவர்கள் கூறுவார்கள்.புலிகள் எழுச்சிப் பெறுவதை தடுக்க மகிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்று மட்டுமே அவர்களால் தெரிவிக்க முடியும்.வடக்கில் புலிகள் எழுச்சிப் பெற வேண்டும் என்ற தேவை மகிந்தவுக்கே உள்ளது. வடக்கு மக்களுக்கு அந்த தேவையில்லை. அரசியலில் இருந்து இனவாதத்தை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments