Breaking News

சிறுமியை துஸ்பிரயோகப்படுத்திய இளைஞன்: இவரை தெரிந்தால் உடன் அறிவியுங்கள் பொலிஸார் மக்களிடம் வேண்டுகோள்

தெஹிவளை பகுதியில் 16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 21 வயது இளைஞனைத் தேடி பொலிஸார் மக்களின் உதவியை நாடியுள்ளனர்.கடந்த 2015ஆம் ஆண்டு தெஹிவளை பகுதியில் வைத்து குறித்த இளைஞன் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.


குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர் யாரும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையத்தின் சிறப்பு விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதில், பாதிக்கப்பட்ட சிறுமியிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவலை வைத்து ஓவியர் ஒருவரின் உதவியுடன் சந்தேகநபரின் புகைப்படம் வரையப்பட்டுள்ளது.இந்த புகைப்படங்களை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள பொலிஸ் ஊடகப்பிரிவு, தகவல் தெரிந்தால் தம்மை தொடர்புகொள்ளுமாறும் மக்களுக்கு அறிவித்துள்ளது.

சந்தேகநபரின் பெயர் - நுவன் தரங்க வசிக்கும் இடம் - பானந்துறை உயரம் - 5 அடி 6 அங்குலம் நிறம் - வெள்ளை குறிப்பு - இவருக்கு பிறப்பு அடையாளமாக மேல் உதட்டிற்கு அருகில் மச்சம் ஒன்று உள்ளது. இவர் குறித்து தகவல் தெரிந்திருந்தால் தேசிய பொலிஸ் சிறப்பு புலனாய்வு பிரிவு - 011 2779196, OIC - சிறப்பு புலனாய்வு பிரிவு 0713549488 / 077-6134977 என்ற இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments