Breaking News

இரண்டு வருடம் மனுசன்மாரை ஏன் தடுப்பில் வைத்திருந்தவை . ஏன் ஊசி போட்டவை ? முன்னால் போராளியின் மனைவி ஆதங்கம்!

போரின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு நச்சு ஊசி ஏற்றப்பட்டதாகவும், இதன் காரணமாக அவர்கள் மர்மமான முறையில் இறப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

300 முன்னாள் போராளிகளுக்கும் எமது மருத்துவர்களால் அனைத்துப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த போராளிகளுக்கு நச்சு ஊசி ஏற்றப்பட்டதற்கான எந்தவித அடிப்படைக் காரணிகளும் பரிசோதனையூடாக நிரூபிக்கப்படவில்லை. அதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.

முன்னாள் போராளிகளுக்கு நச்சு ஊசி ஏற்றப்படவில்லை என முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கடந்த வியாழக்கிழமை வடமாகாணசபையின் 105ஆவது அமர்வில், தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்  முன்னால் போராளியின் மனைவி ! சக்தி தொலைகாட்சி மின்னல் நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவிக்கையில்.


இரண்டு வருடம் மனுசன்மாரை ஏன் தடுப்பில் வைத்திருந்தவை . ஏன் ஊசி போட்டவை இப்பகூட சீஐடிமார் வீட்டுக்கு வந்து வந்து பார்வையிட்டு செல்கின்றார்கள். இன்று எங்கள் புருசன்மார் வேலை செய்ய முடியாமல் எவ்வளவு கஷ்டத்தின் மத்தியில் தான் வாழ்ந்து வருகின்றோம். இவை என்ன ஊசி போட்டவை என்று எங்களுக்கு தெரியாது இந்த ஊசியால் இறந்தும் இருக்கிறார்கள் என பரசங்குளம் ரட்னகாந்தமலர் தெரிவித்துள்ளார்.


2009 முள்ளிவாய்கால் இறுதி யுத்தத்தின் பின் விடுதலைப்புலிகளின் புனர்வாழ்வில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?


No comments