Breaking News

வடக்கு மக்களின் எண்ணங்களும், சிந்தனைகளும் ஆயுத கலாச்சாரத்துடன் கலந்தது - பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர



வடக்கு மக்களின் எண்ணங்களும், சிந்தனைகளும் ஆயுத கலாச்சாரத்துடன் கலந்தது என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் மாற்றமடைய வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், இந்த விடயம் தொடர்பில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பொலிஸ்மா அதிபர்,கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் கரிசணை கொண்டால், பயங்கரவாதத்தின் பின்னர் தற்போது ஒன்பது, பத்து ஆண்டுகளே ஆகியுள்ளன.


இந்நிலையில், பொது மக்கள் மற்றும் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் குறித்து கரிசணை கொள்ள வேண்டும். அவர்கள் அனைவரும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளார்களா? இல்லை.


பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் இப்போதும் அங்கு இருக்கின்றன. அந்த மக்களின் மனநிலையை பார்க்க வேண்டும்.அங்குள்ள மக்கள் கல்வி கற்றது, வளர்ந்தது அனைத்தும் ஆயுத கலாச்சாரங்களின் மத்தியிலேயே இடம்பெற்றுள்ளது. அவர்கள் வெடிப்பொருட்களை பயன்படுத்தியவர்கள்.அந்த மனநிலை மாற வேண்டும். வடக்கு மக்களின் எண்ணங்களும், சிந்தனைகளும் ஆயுத கலாச்சாரத்துடன் கலந்தது. இந்த நிலைமை மாற வேண்டும். இது தொடர்பில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தியுள்ளேன்.


மேலும், இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளேன். அதிகாரிகள், படையினருடன் கலந்துரையாடியுள்ளேன். அந்த சந்தர்ப்பத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விசேட அதிரடிப்படையினர் மற்றும் படையினருடன் இணைந்து செயற்பட்டேன். தற்போது நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments