Breaking News

சத்துரிகாவின் ஜனாதிபதி அப்பா நூல் ! முகநூலில் கருத்து வெளியிட்டார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி சத்துரிகா சிறிசேன எழுதிய“ஜனாதிபதி தந்தை” என்ற சிங்கள நூலை வசித்த பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க நூல் தொடர்பாக தனது கருத்தை முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.


சத்துரிகா சிறிசேன எழுதிய இந்த நூல் நேற்று வெளியிடப்பட்டது. நூல் குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்தை பதிவேற்றியுள்ள பிரதமர், ஜனாதிபதியிடம் உள்ள விசேடமான அடையாளங்கள் காரணமாகவே அவர் நாட்டு மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளார்.

சத்துரிகா சிறிசேனவின் இந்த நூல் மூலம் நாட்டில் வாழும் புத்திஜீவீகள், அரசியல்வாதிகள் , சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்களுக்கு ஜனாதிபதியின் குண அடையாளங்களை ஆழமாக அறியும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

No comments