Breaking News

யுத்ததில் உயிர்நீத்த மக்களை நினைவுகூர அநுராதபுரத்தில் நினைவுத்தூபி-இராஜாங்க அமைச்சர்

யுத்ததில் உயிர்நீத்த மக்களை நினைவுகூரும் தூபி அநுராதபுரத்தில் அமைப்பதே பொருத்தமானதாகும். வடக்கு கிழக்கு மக்கள் இலகுவாக வருகை தரும் வகையில் அமைய வேண்டும் என கருதுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் வஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்காக நினைவுத் தூபியொன்றை அமைக்க வேண்டுமெனக் கோரி ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தவால் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.


யுத்தத்தில் வடக்கு கிழக்கு மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர் அவர்களை நினைவு கூருவதற்கு பொது இடம் ஒன்றை நாம் தெரிவு செய்யவேண்டும் இதற்கு அநுராதபுரத்தில் நினைவு தூபியை அமைத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர்நீத்த மக்களின் உறவினர்கள் இலகுவாக வரக்கூடியதாக இருக்கும் அத்துடன் நினைவுகூரலை மே மாதம் மூன்றாவது வாரத்தில் ஒரு தினத்தை தெரிவு செய்வோம் வேறு எந்தவொரு தினமும் வராத நிலையில் ஒரு நாளை தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் ஆலோசனை தெரிவித்தார்.

மேலும் இதனை அரச கட்டுப்பாட்டின் கீழ் வரக்கூடிய ஏதெனும் ஒரு பொதுஅமைப்பின் கீழ் வரக்கூடிய அமைப்பின் மூலமாக இதன் பராமரிப்பை முன்னெடுக்க முடியும். ஆகவே இந்த விடயங்கள் குறித்து நாம் பொதுவாக கலந்துரையாடியே முடிவுக்கு வரமுடியும் எவ்வாறாயினும் இந்த முன்மொழிவினை நாம் முழுமனதுடன் ஏற்றுக்கொள்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இராஜாங்க அமைச்சரின் கருதுக்கு நன்றி தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இந்த பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டமை மகிழ்ச்சியமைக்கின்றது. . ஆகவே இந்த நல்லாட்சி அரசாங்ம் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு செயற்படுமாயின் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.

- virakesari.

No comments