Breaking News

படைவீரர்களினது பாதுகாப்புக்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் - ஜனாதிபதிபடையினரின் பாதுகாப்புக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள கொள்கைசார்ந்த நிகழ்ச்சித்திட்டங்கள் மிகவும் பலம்வாய்ந்தவை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.


ஹொறவப்பொத்தான ரிடிகஹவெள விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்று முற்பகல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.


ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,


இராணுவத்தளபதி முதல் கடைசி படைவீரர் வரையில் அனைத்து படைவீரர்களினதும் பாதுகாப்புக்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகத் ஜனாதிபதி குறிப்பிட்டார்.


எந்தவொரு வெளிநாட்டு சக்திக்கும் எமது படைவீரர்கள் மீது கைவைக்க இடமளிக்கப்பட மாட்டாது என்ற தெளிவான கொள்கையுடன் அரசாங்கம் செயற்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


இன்று அரசாங்கத்திற்கெதிராக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியொருவர் 'அங்கவீனமுற்ற படைவீரர்களை அரசாங்கம் விரட்டி விரட்டி தாக்குவது தான் கண்ட மோசமான காட்சியாகும் என குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அரசாங்கத்திற்கெதிராக அங்கவீனமுற்ற படைவீரர்களை திருப்பி அவ்விடத்திற்குப் படைவீரர்கள் அல்லாதவர்களைக் கொண்டுவந்து பொலிஸாருக்கும் அவர்களுக்குமிடையே பிரச்சினையை ஏற்படுத்தி அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்கிய அத்தகையவர்கள் இன்று அது தொடர்பாக அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவதாக தெரிவித்தார்.யார் என்ன சூழ்ச்சிகளைச் செய்தாலும் இந்த நாட்டின் படைவீரர்களின் பாதுகாப்புக்கும் நலன்பேணலுக்கும் அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.சிறுநீரக நோய்த் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சிறுநீரக நோய் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு தூய்மையான குடிநீரை வழங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்ட 250 ஆவது நீர் சுத்திகரிப்பு நிலையம் இதுவாகும். 383 மில்லியன் ரூபா செலவில் 249 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் குறித்த பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.குறைந்த வருமானம் பெறும் சிறுநீரக நோயாளிகள் உள்ள குடும்பங்களுக்கு வீட்டு உதவிகளை வழங்குதல், சிறுநீரக நோய் காரணமாக தாய் அல்லது தந்தையை இழந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரணதர மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குதல், 600 வீட்டு நீர்சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்குதல், சிறுநீரக நோய் அபாயத்திற்குட்பட்டுள்ள பிரதேசங்களுக்கு நீர்சுத்திகரிப்பு முறைமையை வழங்குவதற்கு குறித்த பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.பொலன்னறுவை மாவட்டத்தில் 5000 குடும்பங்களுக்கு புதிய நீர் இணைப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சுக்கு சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியினால் வழங்கப்பட்ட 45 மில்லியன் ரூபாவுக்கான காசோலையை கையளிக்கும் நிகழ்வும் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டது.சிறுநீரக நோய் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கு இலங்கை கடற்படை வழங்கும் பங்களிப்பை கௌரவித்து கெப்டன் எம் சி ஈ திசாநாயக்காவுக்கு ஜனாதிபதியினால் விருது வழங்கப்பட்டது.சிறுநீரக நோய் தடுப்பு பிரிவைப் பலப்படுத்;துவதற்கும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வது குறித்தும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.இதேநேரம் ஹொறவப்பொத்;தான ருவன்வெளி மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு குடிநீர்த்தேவையை நிறைவேற்றித் தருமாறும் தளபாட பற்றாக்குறை தொடர்பாகவும் கடிதமொன்று ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது. வட மத்திய மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளினதும் குடிநீர்த்தேவைகளை நிறைவேற்றுவதற்கும் தளபாடங்களை வழங்குவதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் அவை மேற்கொள்ளப்படாமல் இருப்பது பாரிய தவறாகும் என அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அக்குறைபாடுகளை உடனடியாக நிறைவேற்றித்தருவதாக மாணவர்களிடம் உறுதியளித்தார்.ஹொறவப்பொத்தான பதியுத்தீன் மஹ்மூத் கல்லூரியின் மாணவிகளுக்கு பெண்கள் விடுதியொன்றைப் பெற்றுத்தருமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அதற்குத் தேவையான ஏற்பாடுகளை உடனடியாக வழங்குவதாக தெரிவித்தார்.போதைப்பொருள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வெலிமுவபொத்தான கிராமத்தை போதைப்பொருளிலிருந்து விடுதலை பெற்ற கிராமமாக மாற்றியமைக்காக ஜனாதிபதிக்கு பாராட்டுத் தெரிவித்து அக்கிராம சிறுவர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்களினால் ஜனாதிபதிக்கு விருது வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் ஹொறவப்பொத்தான ஸ்ரீசத்தர்ம விகாரையின் விகாராதிபதி வடுலேவே தம்மஜோதி நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, பி ஹரிசன் வடமத்திய மாகாண ஆளுனர் பி பீ திசாநாயக்க, முன்னாள் அமைச்சர் திஸ்ஸகரலியத்த, சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் திட்டப்பணிப்பாளர் அசேல இத்தவெல, பாதுகாப்பு பணிக்குழாம் தலைவர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments