Breaking News

விக்கியை பாராட்டிய டக்ளஸ் ! விரைவில் நேரில் சந்திப்பு


வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை நாடாளுமன்ற உறுப்பினர் ட்களஸ் தேவானந்தா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.



இதனை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், வடமாகாண முதலமைச்சரை விரைவில் சந்தித்து பேசவுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் வினைத்திறன் தொடர்பில் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி உரையாற்றியிருந்தார்.

இதன்போது மாகாண சபை மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அவர் சுமத்தியிருந்தார். இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் முதலமைச்சர் கடந்த மாதம் 17ஆம் திகதி பதிலளித்து பேசியிருந்தார். இதன் போது அதில் அவர் எதிர்கட்சித் தலைவர் சி.தவராசாவை மிகக் கடுமையாகச் சாடியிருந்தார்.


குறித்த விடயம் தொடர்பில் சீ.வி.விக்னேஸ்வரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன், வடமாகாண முதலமைச்சரை விரைவில் சந்தித்து பேசவுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

No comments