Breaking News

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மகளிர் அமைப்பு எற்பாட்டில் விசேட செயலமர்வு..!!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மகளிர் அமைப்பு மற்றும் வடமாகாண ஆளுநர் செயலகத்தின் எற்பாட்டில் புதிய அரசியல் ரீதியான மாற்றத்திற்கு உள்ராட்சித் தேர்தலில் 25 வீதமான பெண்களின் தலைமைத்துவத்தினை வலுப்படுத்த அரசியல் ரீதியான பங்கேற்பு என்னும் தொணிப்பொருளிலான ஊள்ளுராட்சி,மற்றும் வடமாகாணத்தின் சிவில்,சமூக,மற்றும் பெண்கள் தலைமைத் துவம் கொண்ட பிரதிநிதிகளுடான விசேட செயலமர்வு ஒன்று இன்று யாழ் நாவலர் கலாசார மண்டவத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஐன் இராமநாதன் தலைமையில் நடைபெற்றது..

கூறித்த விசேட செயலமர்வுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மகளிர் அமைப்பின் செயலாளர் சந்திரிக்கா டி சொய்சா,மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஐனோல்ட் குரே ஆகியோர்கள் கலந்து கொண்டு இவ் செயலமர்வினை ஆரம்பித்துவைத்தனர்.
இவ் செயலமர்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மகளிர் அமைப்பின் செயலாளர் சந்திரிக்கா டி சொய்சா கருத்து தெரிவிக்கையில் தற்போதைய காலத்தில் புதிய அரசியல் ரீதியாக மாற்றத்திற்கு பெண்களின் அரசியல் கொள்கைப்பிரமானம் முக்கியத்துவம் வாய்ந்தாக காணப்படுகின்றது. இதனால் நாங்கள் எதிர்பார்த்து இருக்கின்றோம். எதிர்வரும் ஊள்ளுராட்சி தேர்தலிகளிலும் பெண்களின் முக்கியத்தும் அவசியம் என்று கூறிப்பிட்டார்.
கூறிப்பாக எனைய நாடுகளுக்கு இனங்கலாக இலங்கையும் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்றநோக்கில் தற்போதைய காலம் காணப்படுகின்றது.அதற்கு முன்னுதாராணமாக இருந்து செயற்படவேண்டும். கூறிப்பாக ஐனாதிபதி அவர்கள் பெண்களின் அரசியல் பெண்கள் உரிமைக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்துவருகின்றார் அவர் தெரிவித்தார்.
இச் செயலமர்வு எதிர்வரும் எப்பில் மாதம் கிழக்கு மாகாணத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூறிப்பாக வர இருக்கின்ற புதிய அரசியல் ரீதியான மாற்றத்திற்கு பெண்களின் வகிபாகம் அவசியம் பிரதேச ஆட்சி முறையில் உள்@ராட்சி மன்றங்களின் முக்கியத்துவம் மற்றும் பெண்களின் பங்குபற்றலை அதிகரித்தல் செய்தல், எதிர்வரும் ஊள்@ராட்சி தேர்தலில் பெண்களின் முக்கியத்துவம்,மற்றும் தற்போதை ஆட்சியில் பெண்களுக்கான அரசியலின் முக்கியத்துவம்,தகவல் தொழில்நுட்ப யுகத்தின் அரசியலின் கண்ணோட்டம்,சர்வதேச நாடுகள்,மற்றும் அயல் நாடுகளின் பெண்களின் அரசியலின் வகிவாகம்,அவ்வாறு ஊள்@ராட்சி தேர்தலில் பெண்களில் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற விடைங்கள் தொடர்பாவும் இதன் போது கலந்துறையாடப்பட்டன.
இதில் சிவில் சமூக பெண்கள் அமைப்பாளர்கள், உள்@ராட்சி திணைக்கள மன்ற பெண்கள் மற்றும் பொது அமைப்பின் பெண்கள் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.




No comments