Breaking News

யாழில் கேரளக்கஞ்சாவுடன் ஐந்து பேர் கைது

யாழ்ப்பாணம் - வடக்கு கடற்பகுதியில் கேரளக்கஞ்சாவுடன் ஐந்து சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த நபர்களை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து சுமார் 155 கிலோகிராம் கேரளக்கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கேரளக்கஞ்சாவைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments