Breaking News

யாழ் பேருந்துநிலையம் முன்னால் போராட்டம்



முல்லைத்தீவு கேப்பாப்புலவு பொது மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி இன்று 12 ஆவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு மக்களும் 9 ஆவது நாளாக போராட்டத்தினை நடத்திவரும் நிலையில் இன்று, யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை, தங்கள் காணிகளை விடுவிக்கக்கோரி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

No comments