Breaking News

யாழில் இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்



யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இலங்கைப் போக்குவரத்து சபை உழியர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் தனித்துவத்தை சிதைக்கும் வகையில் செயற்படும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கு எதிராகவும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தாக்கப்படுவதைக் கண்டித்தே இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தின் போது இ .போ.ச ஊழியர்கள் "இ.போ.ச வின் தனித்துவத்தை சிதைக்காதே", "வடமாகாண போக்குவரத்து அமைச்சு தனியாருக்காகவா?", போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரச பேருந்துகள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும், வவுனியாவில் தனியார் பேருந்து நிலையம் அரசப் பேருந்து நிலையத்துடன் இணைக்கப்பட்டமைக்கு எதிராகவே கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்

மேலும் இப்போராட்டத்தில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களில் உள்ள 7 இ.போ.ச சாலைகளில் ஈடுபடும் பேருந்து ஊழியர்கள் பணி பகீஷ்கரிப்பை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளனர்.

No comments