Breaking News

வெசாக் தினத்தை சர்வதேச விடுமுறை தினமாக அறிவிப்பதற்கு இலங்கை நடவடிக்கை

வெசாக் தினத்தை சர்வதேச விடுமுறை தினமாக அறிவிப்பதற்கான பிரேரணை ஒன்றை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் விஜதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.


எதிர்வரும் மேமாதம் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சர்வதேச வெசாக் தின வைபவத்தின் நிறைவு நிகழ்வு கண்டி ஸ்ரீதலதா மாளிகை வளவில் நடைபெறவுள்ளது.; இதன் போது இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.


வெசாக் தினத்தை சர்வதேச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென்ற பிரேரணையை முதல் முறையாக சமர்பித்தவர் பேராசிரியர் குணபால மலலசேகர. முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இதற்கான அனுமதியை பெற்றார்.


தேரவாத பௌத்தத்தை உலகம் முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில மேலும் சில பிரேரணைகள் ஐக்கிய நாடுகள் தேசிய வெசாக் தின வைபவத்திற்கு அமைவாக சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் நீதி; அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நீதி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்கை பூர்த்தி செய்ய வேண்டுமாயின் உலகில் சமாதானம் அவசியமாகும். இம்முறை சர்வதேச வெசாக் வைபவம் இதற்கு அமைவாகவே மேற்கொள்ளப்படுகிறது. 100 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த வைபவத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். அரச தலைவர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய நாடுகள் சர்வதேச வெசாக்; தின வைபவ ஆரம்ப நிகழ்வு மேமாதம் 12 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதன் நிறைவு நிகழ்வு கண்டியில் மேமமாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments