Breaking News

முடிவின்றி தொடரும் கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டம்...

கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்றுடன் 14 நாட்களுடன் முடிவின்றி தொடகின்றது. விமானப் படையினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 க்கும் அதிகமான ஏக்கர் காணிகளை தம்மிடம் மீள வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். .

மறுபக்கம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் உள்ள தமது காணிகளையும் வீடுகளையும் இராணுவம் விடுவிக்க வேண்டுமெனக்கோரி 11 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இனறு முதல் சுழற்சி முறையிலான அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.


இப்போராட்டங்களுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிழக்கு மாகாண மக்கள் சில சிங்கள அமைப்பினைச் மக்கள் போராட்டங்களை நடத்தினர். அத்துடன் வடமாகாண அமைச்சர்களும் கேப்பாபிலவு மக்களைச் சந்தித்து போராட்டத்திற்கு வலுச்சேர்க்கின்றனர் மக்களின் போராட்டத்தின் நியாயத்தன்மையை வெளிக்கொன்று வருகின்றனர். ஆனால் பாதுகாப்பு அமைச்சும் இராணுவமும் இதற்கு செவிசாய்த்து காணி விடுவிக்காது விடப்பிடியாக உள்ளது.

ஜனாதிபதியுடன், பிரதமருடன் பேசுகிறோம் என அந்த மக்களைச் சந்தித்த அமைச்சர்கள் சொல்லிவிட்டு சென்றார்கள் ஆனால் இதுவரை காணிகளை விடுவிக்குமாறு எந்த அறிவுறுத்தலும் பாதுகாப்பு அமைச்சால் விடுவிக்கப்படவில்லை தொடர்ந்தும் விமானப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

தமிழ் பத்திரிகைகள், தொலைக்காட்சி,வானொலி ஊடகங்களின் செய்திகளில் தினமும் மக்களின் போராட்டத்தினை வெளிக்கொண்டு வருகின்றனர். ஆனால் சிங்கள ஆங்கில தொலைக்காட்சி பத்திரிகைகள் இச்செய்திக்கு முக்கியம் கொடுத்து செய்திகள் வெளிவருவதில்லை. இதனால் சிங்கள மக்களுக்கு இந்த மக்களின் போராட்டம் குறித்த விடயம் தெளிவென்பது இல்லை. தொலைக்காட்சி வானொலி ஊடகங்கள் இப்போராட்ட செய்திகளை சொல்லுகின்றபோது விமானப்படை, இராணுவ பேச்சாளர்களின் கருத்துக்களை கேட்டு செய்தியிடுவதில்லைபோராட்ட ஆரம்பத்தில் கேட்டதுடன் அதற்கு பிறகான தற்போது செய்தியில் இத்தனை நாட்களாகிறது மக்களின் காணிகள் விடுவிக்க முடியாதா என அவர்களிடம் கேட்பதில்லை. மீள்குடியேற்ற அமைச்சர் கூட இந்த மக்களின் போராட்டம் பற்றி எந்த கருத்தையும் வெளியிடவில்லை. இதனால் அந்த மக்கள் தமது போராட்டத்துக்கு அரசு செவிசாய்த்து தமது காணிகளை விடுவிக்காதா என விரக்தியில் உள்ளார்கள்.

No comments