Breaking News

அரசாங்கம் நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது - அமைச்சர் மங்கள சமரவீர

சமகால அரசாங்கம் நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகள் என்பனவற்றை பாதுகாக்க கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு நட்வடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் மங்கள சமரவீர மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஜெனீவாவில் நேற் று ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் அமைச்சர் இன்று உரையாற்றினார்.

இலங்கை அரசாங்கம் சகல இனத்தவர்களுடனும், ஒத்துழைப்புடன் பணியாற்றி நாளுக்கு நாள் முன்னோக்கிச் செல்வதாக அமைச்சர் மங்கள சமரவீர தமது உரையில் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள், நல்லாட்சி, சட்டவாட்சி, நல்லிணக்கம், பொருளாதார அபிவிருத்தி என்பனவற்றை இதன் மூலம் ஏற்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியை தெரிவு செய்ய அதிகளவிலான வடக்கு. கிழக்கு மாகாண மக்கள் வாக்குகளை பயன்படுத்தியுள்ளமை நல்லிணக்கத்திற்குரிய சிறந்த சான்றாகும். ஆரசாங்கத்தின் வெளிப்படை தன்மையினால் சர்வதேன தடைகளில் இருந்து இலங்கை விடுவிக்கப்பட்டுள்ளது. உண்மை அறியும் ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் இரண்டு மாதங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். தவறிழைத்த அனைவருக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments