Breaking News

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை – ஊடகத்துறை அமைச்சர்

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப் பேச்சாளருமான கஜந்த கருணாதிலக தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (15) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் துணைப்போச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


செய்தியாளர் மாநாட்டில் சமூக வலைத்தளங்களை ஒழுங்குறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா என்று செய்தியாளர் கேட்கையில் ,

இதற்கு அமைச்சர் கஜந்த கருணாதில பதிலளித்தார்.

சமூக வலைத்தளங்களை ஒழுங்குறுத்துவதற்கான நடைமுறை உலக நாடுகளில் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இவ்வாறான சமூக வலைத்தளங்களை பொதுமக்கள் பயன்படுத்துவது தொடர்பில் அவற்றை தெளிவுபடுத்துவதற்கு நாம் முயற்சிக்கின்றோம் . ஆனால் இதனை கட்டுப்படுத்துவதற்கோ நிறுத்துவதற்கோ நாம் தீர்மானிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

2015ம் ஆண்டு ஆட்சிமாற்றத்திற்கு இத்தகைய சமூக வலைத்தளங்கள் பாரிய பங்காற்றியிருப்பதாக செய்தியாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவிக்கையில் ,

பாரிய பங்காற்றியது அதனாலேயே முன்னாள் முறைகேடான நிர்வாகத்தை எம்மால் மாற்ற முடிந்தது என்று சுட்டிக்காட்டினார்.

No comments