Breaking News

ஏமாற்றமே தொடர்ந்து வருகிறது – காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் தலைவி

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் தீர்வை பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து தம்மை அழைத்துச் சென்றிருந்தாலும் தமக்கு ஏமாற்றமே தொடர்ந்து வருகிறது என வவுனியா மாவட்டத்திற்கான காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் தலைவி வனிதா தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்றையதினம் முக்கிய அமைச்சர்களுடன் இடம்பெற்ற காணாமல் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பினைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காணாமல் போன உறவுகளை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தி கடந்த 23ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்ததாகவும் அதன்போது அங்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியை நம்பி 26ஆம் திகதியுடன் போராட்டத்தை கைவிட்டதாகவும் தெரிவித்த அவர் எனினும் அவர் வாக்குறுதியளித்தபடி எதுவும் நடைபெற்றதாக இல்லை எனவும் அரசாங்கம் தொடர்ந்தும் கால அவகாசம் கோருகிறதே தவிர தீர்வு பெற்றுக் கொடுப்பதாக இல்லை எனவும் அவர் தெரிவிதுள்ளார்.

No comments