Breaking News

நாடு மீண்டும் ஒரு அழிவை சந்திக்கப்போவதாக வீ. ஆனந்தசங்கரி எச்சரிக்கை



நாடு மீண்டும் ஒரு அழிவை சந்திக்கப்போவதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி எச்சரித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் நாடு எங்கே செல்கின்றது என்பது எவருக்கும் தெரியவில்லை என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஒரு அழிவை நாடு சந்திக்கப்போகின்றது என்பது மட்டும் உறுதி எனவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தலைவர்கள் சிலராவது தன்னுடன் இணைந்து அன்று குரல் கொடுத்திருந்தால், தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் அவலத்தை சந்தித்திருக்கமாட்டார்கள் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகத்தின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலருடன் மாத்திரம் உறவு வைத்துள்ளதாகவும், ஏனையவர்களை புறம்தள்ளி தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் நடத்தும் உங்கள் ஆட்சியில் மக்களுக்கு நிலையான தீர்வு எதுவும் கிட்டப்போவதில்லை எனவும் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு என்று கூறி காலத்தினை வீணடிப்பதை விடுத்து பேச்சுவார்த்தை மூலம் விரைவில் ஒரு தீர்வை முன்வையுங்கள் என வீ.ஆனந்தசங்கரி கோரியுள்ளார்.

No comments