Breaking News

யாழ். நகர் பகுதியில் இப்படியொரு நிலை - யார் விட்ட தவறு....?

யாழ்ப்பாணம் கடந்த காலத்தில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது பல்வேறு அழிவுகளை சந்தித்திருந்தது. தற்போது அங்கு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளில் பொது மக்கள் நலன் சார்ந்த சில விடயங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் அவை உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை என பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில் யாழ். மத்திய நகர் பகுதியில் அமைந்துள்ள பொது கழிப்பறை குறித்து பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த பொது கழிப்பறை உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருப்பதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். உள்ளே சென்று வெளியில் வந்தால் தொற்றாத நோய்கள் கூட தொற்றிக்கொள்ளும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த பொது கழிப்பறையிலிருந்து பலரும் முகம் சுழிக்கும் அளவுக்கு துர்நாற்றம் வீசுவதாக கூறியுள்ளனர். எனவே, இது குறித்து உரிய தரப்பினர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments