Breaking News

யாழ் இருபாலை சந்திக்கு அருகில் பேருந்து மீது கல் வீச்சு



யாழ் இருபாலை சந்திக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டு உள்ளது.

கல்முனையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தின் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டு உள்ளது.


இத் தாக்குதலில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்திற்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்

No comments