Breaking News

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்குகிறது. நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு.

தமிழர்களின் எழுச்சிமிகு போராட்டத்தைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறப்பித்தார் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக, பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தில், மாநில அளவில் திருத்தம் செய்யும் வகையில், தமிழக அரசு, அவசர சட்டம் கொண்டு வந்தது.


மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், சட்டத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு பிறகு இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் கவர்னர் வித்தியாசாகர் ராவ் அவசர சட்டம் பிரகடனம் செய்யப்பட்டவுள்துடன் இன்று மாலை கையொப்பமிடவுள்ளபார. இதன் மூலம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடை நீங்கியுள்ளது.

இதனால் நாளை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடக்கும் . மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்கள் துவக்கி வைப்பார்கள் என தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

No comments