Breaking News

பொலிஸ் நிலையம் அமைந்திருந்த கட்டிடங்கள் உரிமையாளரிடம் கையளிக்கப்படும்! யாழ்.பொலிஸ் அத்தியட்சகர்



யாழ்.மகாத்மா காந்தி வீதியில் உள்ள பழைய பொலிஸ் நிலையம் அமைந்திருந்த கட்டங்கள் மற்றும் வீடுகள் மிக விரைவில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று யாழ்.பிராத்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸனிஸ்லஸ் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று காலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு புதிய கட்டம் அமைக்கப்பட்டு அங்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பழைய பொலிஸ் நிலையம் அமைந்திருந்த அசோகா ஹோட்டலில் இன்னமும் பொலிஸார் உள்ளார்கள்.

இது மட்டுமல்லாமல் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ். மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகருடைய அலுவலகம் அமைந்துள்ள பொது மக்களுடைய வீடுகளும் உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பெரும்பாலும் இன்னும் 3 மாதங்களில் அக்கட்டடங்கள் அனைத்தும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments