Breaking News

மண்ணெண்ணெய் 5 ரூபாவினால் விலை குறைப்பு

ஓரு லீட்டர் மண்ணெண்ணெய் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

(10) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வருவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.


தற்போது 49 ரூபா ஆகவுள்ள மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை இதற்குமைவாக ரூபா 44 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமமைச்சு இன்று விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுக்கமைய ஜனவரி மாதம் முதல் குறித்த விலைக்குறைப்பு அமுலாகும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார.;

இதற்கமைவாக விலைக் குறைப்பு தொடர்பில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

No comments