Breaking News
recent

விடுதலைப் புலி அமைப்பின் மூத்த தளபதியின் தாயார் காலமானார்

1987ஆம் ஆண்டு முல்லைத்தீவில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தினரை கதிகலங்க வைத்த மேஜர் பசீலனின் தாயார் இன்று காலமானார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து சிறந்த கெரில்லா போராளியாகவும், வன்னி மாவட்ட படைத் தளபதியாகவும் இருந்த மேஜர் பசீலன் 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரின் நேரடிச்சமரின் போது வீரமரணமடைந்தார்.

இந்நிலையில் குறித்த மாவீரனின் தாயாராகிய நல்லையா தங்கம்மா 86வது வயதில் இன்று காலமாகியுள்ளார். முல்லைத்தீவு முள்ளியவளை 3ம் வட்டாரத்தை சேர்ந்த குறித்த தாயாரின் இறுதி சடங்குகள் நாளை அவரது இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
jaffnaminnal media

jaffnaminnal media

No comments:

Post a Comment

Powered by Blogger.