Breaking News
recent

வெளிநாடுகளுக்கு பணிப்பெண்ணாக சென்ற கிளிநொச்சி குடும்பப் பெண்ணின் அவலம்


கிளிநொச்சி சாந்தபுரத்தை சேர்ந்த 48 வயதான மூன்று பிள்ளையின் தாய் இரவிச்சந்திரன் சிறிஞானேஸ்வரி என்ற குடும்பப் பெண் வீட்டு வறுமை காரணமாக சவுதி நாட்டுக்கு பணிப்புரிவதற்கு பணிப்பெண்ணாக சென்ற குடும்பப் பெண் 18 வருடம் சவுதி நாட்டின் முதலாளிகளால் அடிமை போன்று அந்தப் பெண்ணை வழி நடத்தி உள்ளார்கள்.
கணவர் மற்றும் பிள்ளைகளுடன் எந்த தொடர்பும் இருக்க கூடாது என்று சவுதி நாட்டு முதலாளிகள் வற்புறுத்தி வந்த நிலையில் பல துன்பங்கள் அனுபவித்து வயிறு மற்றும் முதுகுப் பகுதிகள் பலத்த சத்திர சிகிசைகள் இடம்பெற்று கால்களில் ஆணி காயங்களுடன் சவுதி நாட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பெண் இறந்து விட்டார் என்று சவுதி நாட்டு வைத்தியசாலை தெரிவித்த பிரேத அறையில் போடப்பட்டிருந்தது அப்போது அந்த வைத்தியசாலையில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் தாதியர்கள் அனங்கள் சத்தத்தைக் கேட்டு மீண்டும் அந்தப் பெண்ணை வைத்தியரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சவுதி நாட்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தி இலங்கைக்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பொலிஸார் மேற்கொண்டு இலங்கை அனுப்பி வைத்துள்ளார்கள்.


இலங்கை வரும்போது விமானத்தில் அனைத்துப் பொருட்களையும் களவாடப்பட்ட நிலையில் வெறுங்கையோடு இலங்கை வந்தடைந்தார்.

தனக்கேற்பட்ட துயரங்களை மறந்து 18வருடத்தின் பின் பிள்ளைகள் மட்டும் கணவரை கண்ட சந்தோஷத்தில் தனது காலில் ஏற்பட்ட காயத்தை மறந்து இருந்தபோது.

மீண்டும் காலில் ஏற்பட்ட காயத்தின் வேதனை தாங்கமுடியாமல் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.