Breaking News
recent

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கம்பெறலியா அரசியல்!!


அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த செவ்வாய் கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வழமை போன்று தங்கள் வீர ஆவேச பேச்சுக்களை தொடங்கிவிட்டனர்.
வரவுசெலவுத்திட்ட விவாததின் போது தமிழருக்கு இருக்கும் பாரிய பிரச்சினைக்கு தீர்வாக வரவு செலவுத்திட்டம் அமையவில்லை,பாதுகாப்பு செலவீனத்துக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது,தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காத வரவு செலவுத்திட்டம். என வாக்கெடுப்பு வரைக்கும் வாய் கிழிய பேசும் இவர்கள் வாக்கெடுப்பு நடந்த பிறகு மனசாட்சியை அடகு வைத்து தான் வாக்களித்தோம் என தமிழ் மக்களை முட்டாளாக்குவதும் கூட்டமைப்பின் வாடிக்கையான செயற்பாடு ஆகும்.

தீர்வு திட்டத்திற்குள் சமஸ்டி ஒழிந்து இருக்கின்றது அது போலவே வரவு செலவுத்திட்டத்திலும் எமக்கான அபிவிருத்தி ஒழிந்து இருக்கின்றது என தற்போது கூறிவருகிறார்கள். சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என கூறிய இவர்களே மீண்டும் விசாரணை தேவை என நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்.

மேலும் ஜெனீவா விடயத்தில் ரணில்தான் தமிழருக்கு உரிய தீர்வை பெற்று தருவார் என்றும் மைத்திரி இவற்றை குழப்புவதற்கு செயற்படுகின்றார். என்பதாக தற்போது நாடகம் ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரங்கேற்றி வருகின்றனர்.

ரணில் அரசாங்கம் எவ் திட்டத்தை அமுல்படுத்தினாலும் இவ் கூட்டமைப்பினர் முழு மனதுடன் ஆதரவு தெரிவிப்பார்கள். இதற்காகவே கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தருக்கு ஆடம்பர சொகுசு பங்களாவும்,கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கம்பெறலியா எனும் அபிவிருத்தி நிதியும் இலஞ்சமாக வழங்கப்பட்டு இவர்களின் வாய்
அடைக்கப்பட்டுள்ளது.

மக்களே இப்படியான போலித் தேசிய வாதிகளிடம் இருந்து எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருங்கள்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.