Breaking News
recent

வடக்கில் பூரண ஹர்த்தால் ...!


காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பில், வடக்கில் முழு அடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டம் காரணமாக வடக்கிலுள்ள பாடசாலைகள், அரச செயலகங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக நிலையங்கள் என்பன பூட்டப்பட்டுள்ளதோடு, போக்குவரத்துச் சேவை முற்றாக முடங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த போராட்டம் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் கவனத்தை ஈர்க்கும நோக்கில், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அளித்திருந்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளதை வெளிப்படுத்தியும், தமக்கு இன்னமும் நீதி வழங்கப்படாததைக் கண்டித்தும், இலங்கைக்கு இனிமேலும் கால அவகாசம் வழங்க வேண்டாமென தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும், வணிக அமைப்புகள், தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

-தமிழ்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.