Breaking News
recent

சாரதி அனுமதி பத்திரம் இல்லை : வாகனம் கொடுத்தவருக்கு தண்டம்


சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவருக்கு வாகனத்தை செலுத்தக்கொடுத்த வாகனத்தின் உரிமையாளருக்கு சாவகச்சேரி நீதிதவான் நீதிமன்றம் நான்கு ஆயிரம் ரூபா தண்டம் விதித்துள்ளது. 

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவருக்கு வாகனத்தை செலுத்த வாகனத்தை வழங்கினார் என குற்றம் சாட்டி வாகன உரிமையாளருக்கு எதிராக சாவக்கசேரி பொலிஸார் நேற்று முன்தினம் வழக்கு தாக்கல் செய்தனர்.

குறித்த வழக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , தன் மீதான குற்றசாட்டை வாகன உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து 4 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து சவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.