Breaking News
recent

தமிழ் தேசியத்தை வைத்து மக்களை ஏமாற்றும் தமிழ் தலைமைகள் - முன்னால் போராளிகளை கண்டு கொள்ளாதது ஏன்?

(-தங்கராசா ஷாமிலன்.)

கடந்த கால மூப்பது வருடகால யுத்தம் தற்போதைய அரசியல் குழப்ப சுழ்நிலை வடக்கு கிழக்கு தாயக மக்கள் மற்றும் முன்னால் போராளிகளின் வாழ்வாதார கண்ணீர் துயரங்களில் எந்த வித மாற்றங்களும் ஏற்படவில்லை .
ஈழவிடுதலை போரில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் முன்னால் போராளிகளை கண்டு கொள்ளாது தமிழ் தேசிய தலைமைகள் என காட்டிக்கொள்ளும் அரசியல் தலைவர்களின் சிறந்த பண்புகள் காலம் கடந்து தொடர்ந்து வெளிப்படுகின்றது.


கடந்த கால ஈழப்போராட்ட வரலாறு தாயக மக்கள் மத்தியிலும் முன்னால் போராளிகள் வாழ்விலும் இன்றும் பாரிய இரத்த கண்ணீர் துயரங்களாகவே அமைந்துவருகின்றது.

ஈழ கனவோடு (22) ஆண்டுகள் மனதுகள் சுமந்த கனங்களோடு களத்திலிருந்து கடிதம் எழுதுகிறேன் அம்மா என நினைவுகளைச்சுமந்து  போராடிய போராளி சுப்பிரமணியம் நாகேஸ்வரன் (வயது38 ) உடல் மூழுவதும் காயங்களோடு தற்போது ஒரு கால் பாதிக்கப்பட்டநிலையில் புவரசங்குளம் பகுதி புளியங்குளத்தில் தற்போது வசித்து வருகின்றார்.

ஈழ விடுதலைப் போராளி மனதுகள் சுமந்த கனங்களோடு உண்மையாகவும் நேர்மையாகவும் கருத்து தெரிவிக்கையில்,

சுப்பிரமணியம் நாகேஸ்வரன் நான் ஒரு முன்னால் போராளி உடல் முழுவதும் காயங்கள் தற்போது ஒரு கால் பாதிக்கப்பட்டுள்ளது . எனக்கு மூன்று பிள்ளைகள் சிறிய வயதைச் சேர்ந்தவர்கள் என்னால் என் குடும்பத்தை பார்க்க முடியாது உள்ளது எனது மனைவி தான் கூலி வேலை செய்து என்னையும் என் பிள்ளையையும் பார்த்து வருகின்றார். வறுமைநிறைந்த எனது குடும்பத்திற்கு அரசாங்கத்தால் கொடுக்கப்படும் சமூர்த்தி கொடுப்பனவுகள் கூட இல்லை .  இன்று வைத்தியசாலை சென்று வர கூட என்னிடம் பணம் இல்லை. என்னால் வேலை செய்து உழைக்க முடியும் என்றால் ஒருவரையும் கேட்க மாட்டேன். தாயக விடியல்  மண்ணுக்காக போராடித்தான் இப்படியான ஒரு நிலையில் இருக்கின்றேன். எமது தியாகங்களை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது தமிழ் தேசியச் தலைமைகள் தற்போது அரசியல் சுய இலாபத்திற்காக எவ்வாறு செயற்படுகின்றார்கள் என்பது மக்கள் அனைவரும் நன்கு அறிந்ததே.

தமிழ் தேசிய தலைமைகளிடம் உதவி கோரி இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் வடமாகாணசபை ஐந்து வருட ஆட்சி காலம் நிறைவடைந்ததும் யாவரும் அறிந்தவிடயம் இவர்கள் தமது காலத்தை வீனடித்துள்ளார்கள். குறிப்பாக முன்னால் வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரனிடம் நான் நேரடியாகச்சென்று வாழ்வாதார உதவி கோரிய போது செய்து தருவதாக கூறினார். அதற்கு பிறகு எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஏன் என கூட திரும்பி பார்க்கவில்லை தேர்தல் காலங்களில் வீடு தேடி வருகின்றார்கள் . அதற்கு பிறகு எங்களை திரும்பி கூட பார்க்கிறார்கள் இல்லை . எனது குடும்பத்தை பார்ப்பதற்கு வாழ்வாதார உதவி தேவை என மனகலக்கத்தோடு தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து தெரிவிக்கையில்,

2009 ம் ஆண்டு ஈழப் போர் முடிவிற்கு கொண்டுவந்ததற்கு பின்னர் நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது . எனினும்  இலங்கை அரசியல்  ஒற்றையாட்சி முறைமை நீக்கப்பட வேண்டும்  சமஸ்டி முறையிலான தீர்வை வழங்க வேண்டும்  அத்தோடு அரசியலமைப்பின் 13ம் 19ம்  சட்டப் படி மாகாணசபைக்குரிய அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டும். அவ்வாறு அரசியல் தீர்வு எட்டப்பட்டாலே மாகாணசபையால் மக்களுக்காக சிறந்த முறையில் சேவையாற்ற முடியும். தற்போது எங்கள் தேவை கருதி  மாகாணசபைக்கு சென்றால்  அரசாங்கத்தை கேட்க வேண்டும் என கூறுகிறார்கள் அவ்வாறான நிலை காணப்பட்டால் மாகாணசபை எதற்கு என கேள்வி எழுப்புகிறேன். எதிர்வரும் காலங்களில் என்றாலும்  உங்களை நம்பி வாக்களித்து விட்டு  உங்களை நம்பி வரும் போது கண்டுகொள்ளாதும் அவர்கள் தேவைகளை நிவர்த்தி செய்யாமல் இருந்து விடாதீர்கள் என கோரிக்கை விடுக்கின்றேன் என மனச்சுமைகளோடு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.