Breaking News
recent

பெற்றோரை இழந்த நல்லூர் மாணவிக்கு உதவி கரம் நீட்டிய நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கிரிதரன் .



நல்லூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்துவரும் பெண் தலைமைத்துவ குடும்பத்தைச் சேர்ந்த தாயார் மற்றும் நான்கு பெண் பிள்ளைகளும் வசித்துவந்திருந்த நிலையில் (02.09.2018) அன்று இடம்பெற்ற வீதி விபத்தில் தாயை இழந்திருந்தார்.


குறித்த சிறுமியின்  தந்தையார்  2007ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச் சிறுமி புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்து யாழ் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் தரம் 06 ல் கல்விகற்று வருகின்றார்.

குறித்த மாணவி கல்வி நடவடிக்கையில் எதிர்காலத்தில் தங்கு தடையின்றி தொடர்வதற்கு நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் தெய்வேந்திரம் கிரிதரன் மூலம் குறிப்பிட்ட மாணவிக்கு திருநெல்வேலி வட்ட லயன்ஸ்கழகத் தலைவர் வ.சிறிதரன் ஊடாக மாதாந்தம் கல்விச் செயற்பாட்டிற்காகவும் மற்றும் அவர்களுடைய எதிர்காலம் பாதிப்படையாத வகையில் அவர்களின் எதிர்காலச் செயற்பாட்டை வலுவூட்டும் நோக்கில் குறிப்பிட்ட மாணவிக்கு மக்கள்வங்கியில் நிலையான வைப்பு ஆரம்பிக்கப்பட்டு ரூபா ஒருலெட்சத்தி ஐம்பதினாயிரம் ரூபா பணம் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.