Breaking News
recent

பொறுப்பு மிக்க தீர்மானத்தை மேற்கொண்டமை தொடர்பில் ஜனாதிபதிக்கு நன்றி - பிரதமர்

நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் பொறுப்பு மிக்க தீர்மானத்தை மேற்கொண்டமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற நாட்டைக் காக்கும் மக்கள் மகிமை என்ற பேரணியில் கலந்து கொண்டு . உரையாற்றிய பிரதமர் அர்ப்பணிப்புடன் மக்களுக்கு உயர்ந்தபட்ச சலுகையைப் பெற்றுக் கொடுப்பது தமது நோக்கமாகும் என தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க உள்நாட்டு வளங்களை விற்பனை செய்வதற்கு முயற்சித்த போது அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் மக்களின் உரிமைக்காக தான் ஜனாதிபதியுடன் கைகோர்த்ததாக அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற சிறப்புரிமைச் சட்டத்தை மீறி சபாநாயகர் கரு ஜயசூரிய செயற்பட்;டால் அவர் கடுமையான தண்டனையை அனுபவிக்க நேரிடுமென முன்னாள் சபாநாயகர் டபிள்யு.ஜே.எம்.லொக்கு பண்டார தெரிவித்தார்.
சபாநாயகர் அரசியலமைப்பை மீறி செயற்படுவதாக புதிய சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதிக்கு மாத்திரமே பாராளுமன்றத்தைக் கூட்டும் வல்லமை இருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் சுயமாகவே பணயக் கைதியாக மாறியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அவரைப் பாதுகாப்பதற்காக சிவப்பு யானைக் குட்டிகள்இ கடும் முயற்சியில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டினார். 

பேராசிரியர் ஜி.எல்.பீரிசும
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.