Breaking News
recent

காட்டுச்சட்டத்தை நாட்டில் நடைமுறைப்படுத்த முடியாது- அநுரகுமார திஸாநாயக்க


அரசாங்கத்தில் நிலவும் பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக்கொள்ள வேண்டும். காட்டுச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் நாடாளுமன்றில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில், தெரிவுக்குழு உறுப்பினர்கள் தொடர்பாக வாக்கெடுப்பிற்குச் செல்லுமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்-


”நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எமது நாட்டில் காட்டுச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது. நிலவு வெளிச்சத்திலேயே எமது நாட்டின் பிரதமர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தெரிவுக்குழுவிற்காக வாக்கெடுப்பு நடத்துங்கள். பெயரை குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்துங்கள். எமது பிரச்சினைகளை நாடாளுமன்றில் தீர்த்துக்கொள்வோம்.

சபாநாயகரே, தங்களின் செயற்பாடு அரசியலமைப்பிற்கு முரணானதென குறிப்பிடுகின்றனர். அப்படியாயின் சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவாருங்கள். அதற்கும் இந்த நாடாளுமன்றம் தயாராகவே உள்ளது.

வேண்டுமென்று அரசியலமைப்பை மீறினால் மற்றும் மனநோயால் மீறினால் ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என அரசியலமைப்பு குறிப்பிட்டுள்ளது -

தான் சிறுவயதாக இருந்த போதே பாராளுமன்றில் இருந்ததாக மஹிந்த கூறினார். அது எனக்கு தெரியாது, அவர் பாராளுமன்றில் அதிக காலம் இருந்துள்ளார் ஜனாதிபதியாக இருந்தார், இ்ன்று திருட்டு பிரதமராக இருக்கிறார்

பாராளுமன்றில் கடுமையான அடாவடிகள் மூலம் கதிரைகளை உடைத்து மிளகாய் தூள் வீசினார்கள். இவர்கள் அரசமைத்தத நீதிமன்றுங்களில் உள்ள வழக்குகளில் தப்பிக்கவே இவைகள். எப்சியடியினர் ஒரு வலையை வீசியிருந்தால் அனைவரும் சிக்கியிருப்பார்கள் .

ஜனவரி 8ம் திகதி கொலையாளிகளுக்கு எதிராக வாக்களிக்கப்பட்டது ஆனால் இன்று ஜனாதிபதி அவர்களின் பக்கமே இருக்கிறார்

ஜே.ஆர்.ஜயவர்தன அன்று நாடாளுமன்றை முன்கூட்டியே கலைத்து, உறுப்பினர்களின் இராஜினாமா கடிதங்களை பலவந்தமாக பெற்றுக்கொண்டார். வடக்கில் ஜனநாயகம் இல்லாமல் போனமைக்கு இதுவும் காரணம். அதன் தொடர்ச்சியாக சிவில் யுத்தம் ஏற்பட்டு இலட்சக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

19ஆம் அரசியலமைப்பின் விழுமியங்களை ஜனாதிபதி மீறிவிட்டார். கற்பனையால் நாட்டை ஆள முடியாது. அவருக்கும் வரையறைகள் உள்ளன. அதனை மீறி செயற்பட முடியாது.

நாடாளுமன்றம் மௌனிக்கப்பட்டதால் நீதிமன்றத்தை நாடினோம். உயர்நீதிமன்றம் இந்த சூழ்ச்சியின் முதலாவது கட்டத்தை தோற்கடித்துவிட்டது.

இந்த சூழ்ச்சி மக்களின் ஆணைக்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. அதனை தோற்கடிக்கும் பொறுப்பு எமக்குண்டு” என்றார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.