Breaking News
recent

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதி வேட்பாளர்- நவீன் திசாநாயக்க



ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒருவரையே பொது வேட்பாளராகக் களமிறக்கப் போவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க குறிப்பிட்டார்.


நான் சபாநாயகருக்கு அழுத்தம் விடுப்பதாக தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார். நான் அறிந்த வகையில் கரு ஜயசூரியவை அவ்வாறு முடக்க முடியாது. 

பெரும் பான்மை இல்லாமையினாலேயே அவர்கள் தற்போது இவ்வாறு பேசுகின்றனர். நான் மகாநாயக்க தேரர்களை சந்திக்கச் சென்ற போது ஊடகங்களுக்கு ஒரு விடயத்தைக் கூறியிருந்தேன். அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஒரு பொது வேட்பாளரை முன்நிறுத்துவதாகக் கூறியிருந்தேன். அதன் மூலம் நான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒருவரையே பொது வேட்பாளராகக் களமிறக்குவோம் என்பதைக் கூறியிருந்தேன்.

என நவீன் திசாநாயக்க இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.