Breaking News
recent

ரணிலே தொடர்ந்தும் தலைவராக நீடிப்பார். ஐ.தே.க


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தொட ர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவே நீடிப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கலைக்கப்பட்டு பாராளுமன்ற தேர்தல் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்ட நிலையில், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக தற்போது உப தலைவராக செயற்படும் சஜித் பிரேமதாச நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகின.


இந்நிலையில், நேற்று சனிக்கிழமை அலரிமாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இதில்
சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக்குவது தொடர்பில் எந்தத் தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கட்சியின் தலைவராகத் தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவே நீடிப்பாரென்று தெரிவிக்கப்படுகின்றது.


பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியிலிருந்து நீக்கி மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க முன்னர் சஜித் பிரேமதாசவை அழைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரியபோது சஜித் பிரேமதாச மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.