Breaking News
recent

மாவீரர் நாளுக்கு தடை கோரிய கோப்பாய் பொலிஸார் வழக்கு : 23 நாளை தீர்ப்பு.



பயங்கரவாத அமைப்பாக இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூறி மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டிக்க தடை கோரிய கோப்பாய் காவல்துறையினரின் மனு மீதான கட்டளை நாளைய தினம் (23) வழங்கப்படும் என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் அறிவித்திருந்தார்.

மனு  நேற்று (21) பிற்பகல் நீதிமன்றால் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

கோப்பாயில் இராணுவத்தின் 512ஆவது படைத்தளம் அமைந்துள்ள (மாவீரர் துயிலும் இல்லம்) காணிக்கு முன்பாக உள்ள சிறிதரன் என்பவருடைய காணி துப்புரவு செய்யப்பட்டுள்ளது. அங்கு மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.

அத்துடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. அது தொடர்பில் எமக்கு ஆட்சேபனை இல்லை“ என்று கோப்பாய் காவல்துறையினர் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தனர்.

மனுவில் எதிர் மனுதாரர் தொடர்பில் குறிப்பிடப்படவில்லையே? என்று மன்று கேள்வி எழுப்பியது.

எந்த நபர் மீதும் குற்றச்சாட்டு இல்லை என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.