Breaking News
recent

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் வீட்டிலிருந்து பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு (PHOTOS)

கேகாலை பகுதியில் அனுமதி பத்திரமின்றி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவனெல்ல தொகுதி அமைப்பாளர் இம்தியாஸ் காதர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடி படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பிலேயே இம்தியாஸ் காதர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இம்தியாஸ் காதர், தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கைது செய்யப்பட்ட இம்தியாஸ் காதரின் வீட்டிலிருந்து எம்.பீ 5 கே ரக துப்பாக்கி ஒன்றும், அதற்கு பயன்படுத்தப்படும் 79 துப்பாக்கி ரவைகளும், அதற்கான மெகஸின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், ரி-56 ரக துப்பாதக்கி ஒன்றும், அதற்கு பயன்படுத்தப்படும் 33 துப்பாக்கி ரவைகளும், கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இம்தியாஸ் காதரின் வீட்டிலிருந்து மேலும் பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த துப்பாக்கி உள்ளிட்ட அயுதங்கள் எதற்காக கொண்டு வரப்பட்டுள்ளன என்பது தொடர்பிலான விசாரணைகளை விசேட அதிரடி படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.


Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.