Breaking News
recent

பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் நடவடிக்கைகள் அடுத்த வருடம் மீண்டும் ஆரம்பம் - அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன்

பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில் செயலிழந்த பரந்தன் இராசாயன தொழிற்சாலைப் பணிகள் அடுத்த வருடத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென்று அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.


வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் சிலர் இந்நாட்டு சுற்றாடலில் ஆர்வம் கொண்டுள்ளவர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை இந்த தொழிற்சாலை வளவை பார்வையிட்டனர். இந்த தொழிற்சாலை 50 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இராணுவத்தினர் இதில் தங்கியிருந்தனர். இவர்களிடம் இருந்து இந்த பகுதியை பெற்றுக் கொள்வதற்காக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது. தற்பொழுது 35 ஏக்கர் நிலப்பகுதியை மீள அளிப்பதற்கு இவர்கள் உடன்பட்டுள்ளனர் என்று அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார். தொழிற்சாலை செயற்படும் காலப்பகுதியில் எஞ்சிய 12 ஏக்கர் காணிகளையும் பெற்றுக் கொள்ள முடியும். 


காங்கேசன்துறை பிரதேசத்தில் 300 ஏக்கரில் தொழில் பேட்டை அமைக்கப்படவுள்ளது. முல்லைத்தீவில் ஓட்டுத் தொழிற்சாலையும்இ கொக்காவில் மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் டயிடெனியம் ஒக்;சைட் தயாரிப்பும்இ மட்டக்களப்பு வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.