Breaking News
recent

மகளின் கல்வி நிலையை உயர்த்த முன்வாருங்கள் முன்னால் போராளியின் மனைவி.

(-தங்கராசா ஷாமிலன்.)

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து  நான்கு  வருடங்கள் கடக்கவுள்ள நிலையிலும் வடக்கு மக்கள்  மற்றும்  முன்னால் போராளிகளின் கண்ணீர் துயரங்களில் எந்த வித மாற்றங்களும் ஏற்படவில்லை .

கடந்த காலயுத்த பிடியில் சிக்கி தவித்த அப்பாவி மக்களின் துயரங்கள் இன்றும் அவர்களின் வாழ்க்கையில் பாரிய கண்ணீர் துயரங்களாகவே அமைந்துவருகின்றது. 

தாயக கனவோடு  2009ம் ஆண்டு இடம்பெற்ற  இறுதிநேர யுத்தத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு  கலை பண்பாட்டு கழகத்தில் போராளியாக  இருந்த  கருணாரத்தினம் (வடநாதன்)  இறுதி நேர முள்ளிவாய்கால் யுத்தத்தில் தனது இரண்டு கால்களையும் இழந்து தனது  மனைவி ஜெயலட்சுமி  கண் முன்னே மரணமடைந்தார்.

தனது கணவரை இழந்து  சிறிய மகளுடன்  யாரும் உதவிகள் அற்ற தனி மரமாக நின்ற ஜெயலட்சுமி  பல இடங்களுக்கு அலைந்து திரிந்து  மீண்டும்  2010ம் ஆண்டு அவரது  சொந்த இடத்திற்கு  மீள்குடியேற்றப்பட்டார்.


யாரும் உதவிகள் அற்ற தனி மரமாக நின்று தனது மகளை படிப்பிப்பதற்காக  மகளின் எதிர்கால வாழ்கைக்காக  தொடர்ந்தும்  தனது வயதைப்பொருட்படுத்தாது  வஞ்சக உலகில் போராடிவருகின்றார்.

வடநாதனின் மனைவி ஜெயலட்சுமி  தனது குடும்ப வறுமை குறித்து உண்மையாகவும் நேர்மையாகவும் கருத்து தெரிவிக்கையில்.

கோர  யுத்தம்  முடிவுக்கு கொண்டுவரப்பட்டு  நாங்கள் முகாங்களில் தங்கவைக்கப்பட்டிருந்து  2010ம் ஆண்டு எமது சொந்த இடமான 290. சிவபுரம் பரந்தனில் மீள் குடியோற்றப்பட்டடோம். அந்தவேளையில் எமது சிறிய வீட்டில் தான் குடியிருந்தோம் நிறைய சிரமங்களை ஏதிர்நோக்கி  இருந்தோம் அதன் பிற்பாடு  கடந்த 2016  இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் வீட்டுத்திட்டம்  மீள் குடியேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் அவர்களால்  வழங்கப்பட்டு  வீட்டுப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது.   

மகள் க.தமிழ்செல்வி  (வயது -12)  குமரபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று  வருகின்றார். எனது மகளை கல்வி கற்க வைப்பதற்கும்  சரியாக பிள்ளைக்கு உணவு வாங்கி கொடுக்க கூட பணம் இல்லை என்னிடம் இருக்கிறவற்றை வைத்து  வாழ்க்கையை நடாத்தி வருகின்றேன்.  யாரிடமும் பணம் கேட்பதற்கு கூட  மனநிலை மறுக்கின்றது.  என்றாலும் அன்றாட ஜீவியத்துக்கு மிகவும் கஸ்டமாக இருக்கின்றது.  சமூர்த்தி வழங்கியிருக்கின்றார்கள் கூலி வேலைசெய்து தான் நானும் மகளும் சாப்பிடுகின்றோம். புலம் பெயர்நாடுகளில் இருக்கும்  தாயக  சகோதர சகோதரிகளை கேட்டுக்கொள்வது  என்னுடைய பிள்ளை படிப்பிற்காக உதவி செய்யுங்கள்  தனிமையாக எந்த உறவுகளும் அற்று  எனது பிள்ளையை வளர்த்துக்கொண்டு இருக்கின்றேன். கிணறு இருக்கின்றது ஆனால் ஒரு செட்டு தண்ணீரும் இல்லை  இதை சீர்செய்வதற்கு  வசதியில்லை  வேறு இடத்தில்  தான் குளிக்ககூட  சென்று வருகின்றோம்.  எனக்கு சுயதொழில் செய்வதற்கு வசதிவாய்ப்புகளை ஏற்படுத்தி  தாருங்கள்.  எதிர்வரும் 2019  புதிய ஆண்டிலாவது  தமிழ் அரசியல் தலைமைகள் மற்றும் நல்லாட்சி அரசாங்கம் முன்னாள் போராளிகள் குடும்ப பொருளாதாரம் பற்றி விசேட கவனம் செலுத்தி குறித்த  விடயத்திற்கு  நிரந்தர தீர்வை முன்வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்  எமது கையாளாகாத  தமிழ் அரசியல் தலைமைகளின்  முகத்திரையையும்  வெளிப்படையாக சுட்டிகாட்டியிருந்தார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.