Breaking News
recent

மலையக மக்களுக்கு ஆதரவாக தாயகத்தில் எழுச்சியாக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்.


(- ஞா.பிரகாஸ்)

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி "உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமும் கைகோர்ப்போம்" எனும் தொனிப்பொருளில் இன்று   (21-10-2018 ) ஞாயிற்றுக்கிழமை  முற்பகல் 10:00 மணிக்கு  தமிழர் தாயகம் யாழில்  அறவழிப் போராட்டம்  ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தோட்டத் தொழிலாளர்களுக்காய் வடக்கில் இருந்து உரிமைக் குரல் கொடுக்கும் நோக்கில் சமூக வலைத்தள நண்பர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டமானது காலை 10:00 மணி முதல் 10:30 வரை யாழ் பேருந்து நிலையம் முன் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, "உறிஞ்சாதே உறிஞ்சாதே தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சாதே", "சுரண்டாதே சுரண்டாதே தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டாதே", "சம்பளத்தை உயர்த்திக்கொடு இல்லை அடிமை சாசனத்தை மாற்று" போன்ற கோசங்களும் எழுப்பப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் யாழ் மாநகரசை முதல்வர் உட்பட பல இளைஞர்கள் கட்சி சார்பற்று கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.