Breaking News
recent

கல்வியங்காடு வீடு ஒன்றில் பித்தளை பாத்திரங்கள் திருட்டு சந்தேக நபர்கள் இருவர் கைது - பொருட்களும் மீட்பு

(-தங்கராசா ஷாமிலன்.)

யாழ் கல்வியங்காடு புதியசெம்மணி வீதி வீடு ஒன்றில் மதியம் யாரும் இல்லாத தருணத்தில் ஜன்னல் கம்பிகளை களற்றி வீட்டினுள் உட்புகுந்து பித்தளை பாத்திரங்கள் திருட்டுப்போனதாக வீட்டு உரிமையாளர் விஸ்வலிங்கம் கீர்த்தி ராசன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் (26-10-2018) மாலை முறைப்பாடு செய்திருந்தார்.

புதிய செம்மணி வீதி தொடர் திருட்டு சம்பவங்களின் விசாரனையை மேற்கொண்ட குற்றத்தடுப்பு பொலிஸார் (26) நேற்று முன்தினம் இரவு இருபாலையைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களை கைது செய்து விசாரணையை முன்னேடுத்திருந்தனர்.

விசாரனையின் போது இருசந்தேக நபர்களும் தாமே இந்த திருட்டை மேற்கொண்டதாக பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளனர்.

தொடர் விசாரனையின் போது  நேற்று (27)  திருடப்பட்ட பாத்திரங்கள் சில கல்வியங்காட்டுக்கு அருகாமைச்சுற்றாடலைச்சேர்ந்த பழைய இருப்பு கடைகளில்  திருடர்களால் விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது. திருட்டு தொடர்பாக கடை உரிமையாளர்களிடம் விசாரனையை மேற்கொண்ட பொலிஸார் சில பாத்திரங்கள் மற்றும் நீர் இறைக்கும் மோட்டர் ஒன்றினையும் கைப்பற்றியுள்ளனர்.

தொடர்ந்து விசாரனைகளை மேற்கொண்டுவரும் கோப்பாய் பொலிஸார் இரு சந்தேக நபர்கள் மற்றும் பொருட்களை யாழ். நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.





Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.