Breaking News
recent

புதிய செம்மணி வீதி வடிகாலமைப்பு மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த கஜேந்திரகுமாருக்கு நன்றி தெரிவிப்பு.

கல்வியங்காடு புதியசெம்மணி வீதியின் புனரமைப்பு வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. புனரமைப்பு நடைபெற்ற தருணத்தில் மழைநீர் வெள்ளம் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட மதகுகள் மூடப்பட்டமையினால் இப்பகுதியில் வாழும் குடியிருப்பாளர்கள் பல அசெளகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



புதிய செம்மணி வீதி மக்களின்  தொடர் கோரிக்கைக்கு அமைவாக மக்களின் பிரச்சனைகள்  குறித்து  நேரில் பார்த்த குறித்த குறிச்சி வட்டார உறுப்பினர்  ந.கஜேந்திரகுமார்  உண்மையாகவும் நேர்மையாகவும்  வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.

தொடர் கலந்துரையாடலின்  பயனாக  (26) இன்றைய தினம் வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர்கள், வலிகிழக்கு பிரதேசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் நேரடியாக வருகைதந்து குறித்த பகுதி மக்களுடன் கலந்துரையாடி இப்பிரச்சிணைக்கு உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்திருந்தனர்.

அதிகாரிகள் உறுதி மொழியைத் தொடர்ந்து  புதிய செம்மணி வீதி மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

எம் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சிணைகளுக்கு உடன் தீர்வு காணும் வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும்,வலிகிழக்கு பிரதேசசபை உத்தியோகத்தர்களுக்கும் எமது வட்டார பிரதேச சபை உறுப்பினர் ந.கஜேந்திரகுமார் அவர்களுக்கும் பிரதேச மக்கள்  மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம் என தெரிவித்திருந்தனர்.


Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.