Breaking News
recent

வடக்கு சபைக்கான அதிகாரங்களை பிரயோகிக்க முடியாத சூழ்நிலை: அனந்தி குற்றச்சாட்டு

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் மாகாண சபை சட்டம் ஆகியவற்றின் பிரகாரம் வட மாகாண சபைக்கு கிடைக்க வேண்டிய அதிகாரங்களை பிரயோகிக்க முடியாத சூழ்நிலை தொடர்வதாக வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவிக்கின்றார்.


இவ்வாறான விடயங்களை கேள்விக்குட்படுத்துவோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அதன் தலைமை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.


வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனின் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் கட்சியை யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.