Breaking News
recent

உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் முன்னால் போராளிகளை கண்டு கொள்ளாத தமிழ் தேசிய தலைமைகள்.

(-தங்கராசா ஷாமிலன்.)

நல்லாட்சி அரசாங்கம் உருவாகி  ஐந்து வருடங்களில் மூன்று அரை  வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் வடக்கு  கிழக்கு  தாயக மக்கள் மற்றும் முன்னால் போராளிகளின் வாழ்வாதார கண்ணீர் துயரங்களில் எந்த வித மாற்றங்களும் ஏற்படவில்லை .


ஈழவிடுதலை போரில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும்  முன்னால் போராளிகளை  கண்டு கொள்ளாது  தமிழ் தேசிய தலைமைகள் என காட்டிக்கொள்ளும்  அரசியல் தலைவர்களின் சிறந்த பண்புகள் காலம் கடந்து வெளிப்படுகின்றது.

கடந்த கால ஈழப்போராட்ட  வரலாறு தாயக மக்கள் மத்தியிலும்  முன்னால் போராளிகள் வாழ்விலும்  இன்றும்  பாரிய கண்ணீர் துயரங்களாகவே அமைந்துவருகின்றது.

ஈழ கனவோடு  (17) ஆண்டுகள்  மனதுகள் சுமந்த கனங்களோடு  போராடிய போராளி  தங்கராசா லக்சுமனன் (வயது 40 )   உடல் மூழுவதும்  காயங்களோடு  தற்போது  ஒரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டநிலையில் 3ம் பகுதி திருவையாறு கிளிநொச்சியில் தற்போது வசித்து வருகின்றார்.  ஈழ  குயில் என அழைக்கப்படும்  ஆசை மகள் மகிழினி (வயது -12 )  திருவையாறு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுவருகின்றார்.  தனது உடல்நிலையையும் மனைவி பிள்ளையின் எதிர்காலம் குறித்தும்  தொடர்ந்து  சிந்தித்தவண்ணமுள்ளார்.
ஈழ போராளி  மனதுகள் சுமந்த கனங்களோடு உண்மையாகவும் நேர்மையாகவும் கருத்து தெரிவிக்கையில்,

தங்கராசா லக்சுமனன் நான் ஒரு முன்னால் போராளி உடல் முழுவதும் காயங்கள் தற்போது ஒரு சிறு நீரகமும் பாதிக்கப்பட்டுள்ளது  . யாழ்ப்பாணம் தனியார் வைத்தியசாலையில்  சிகிச்சை பெறுவதற்கு 1600000.00 பணம் தேவை என முகநூலினுடாக பலரிடம்  உதவிசெய்ய கோரிக்கை விடுத்தேன் .எமது புலம் பெயர்மக்கள் ஒருவரும் உதவி செய்யவில்லை எனது  உடல் நிலை குறித்த மருத்துவ சான்றிதல்களை போட்டும்  ஒருவர் லண்டனில் இருந்து தொலைபேசி மூலமாக அழைத்து ஏன் நீங்கள் பொய் சொல்கிறாய் நீ போராளியா என பேசினார்.  என்னால் வேலை செய்து உழைக்க முடியும் என்றால் ஒருவரையும் கேட்க மாட்டேன். நாட்டிக்காக போராடித்தான்  இப்படியான ஒருநிலையில் இருக்கின்றேன். நிறையபேர் உதவி செய்யுறன் செய்யுறன் என்று கூறி ஏமாற்றிவிட்டார்கள் இனியும் உண்மையான உள்ளங்கள்  ஏமாற்றாமல் நேரடியாக தொடர்பு கொண்டு இந்த உதவியை எனக்கு செய்வீர்கள் என்று நம்புகிறேன். தமிழ் தேசிய தலைமைகளிடம் உதவி கோரி இரண்டு வருடங்கள்  கடந்த நிலையிலும்  குறிப்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன்  மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்  அவர்களிடமிருந்து உதவி கோரிய போது கடிதம் எழுதி கொடுத்துவிட்டு செல்லுங்கள் என கூறினார்கள்  அதற்கு பிறகு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இரண்டு மூன்று தரம் கேட்டு விட்டேன் உதவி செய்யுறம் செய்யுறம் என்றார்கள் செய்யவில்லை  தேர்தல் காலங்களில் வீடு தேடி வருகின்றார்கள் . அதற்கு பிறகு எங்களை திரும்பி கூட பார்க்கிறார்கள் இல்லை . எனது குடும்பத்தை பார்ப்பதற்கு வைத்திய செலவோடு வாழ்வாதார உதவிகளும் தேவை என மனகலக்கத்தோடு தெரிவித்தார்.

மேலும் தற்போது  தாயகத்தில் திட்டமிட்டவகையில் அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள் குறித்து தொடர்ந்து தெரிவிக்கையில்,

2009 ம் ஆண்டு ஈழப் போர் முடிவிற்கு கொண்டுவருவதற்கு முன்னர் இருந்த விடுதலைப்புலிகளின் காலமே சிறந்தது. அப்பாவி மக்கள் மீது வாள்வெட்டு ரவுடிசம் இல்லை பெண் பிள்ளைகள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் தொல்லைகள் இல்லை ஈழத்தில் அதிகரித்து வரும் கஞ்சா பாவனை இல்லை சரியான கட்டுபாடு போன்றனவற்றோடு இருந்தது . மக்கள் நின்மதியாக இருந்தார்கள் .   தற்போது காணப்படும் ஈழத்தை பார்க்க மனது தாங்க முடியாத வேதனை அழிக்கின்றது . தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லாத காரணத்தாலேயே இவ்வாறான வன்முறைகள் தொடரந்து  நடக்கின்றது என  தெரிவித்திருந்தார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.