Breaking News
recent

150 வருடங்களுக்கு பின்னர் நிர்மாணிக்கப்படும் முழு அளவிலான தொழில்நுட்ப தொல்பொருள் நிலையத்திற்கு ஜனாதிபதி விஜயம்



பொலன்னறுவை நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் தொழில்நுட்ப தொல்பொருள் நிலைய நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பார்வையிட்டார்.

இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

150 வருடங்களுக்கு பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்படும் முழு அளவிலான தொழில்நுட்ப தொல்பொருள் நிலையம் இதுவாகும். வரலாற்று காலம் முதல் தற்காலம் வரையிலான பாரம்பரிய தொழில்நுட்ப முறைமைகள், மன்னர்கள் ஆட்சி காலத்தின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய வகையில் இந்த தொழில்நுட்ப தொல்பொருள் நிலையம் அமைந்துள்ளது. இது நவீன கேட்போர்கூடம் மற்றும் நவீன தொழில்நுட்ப கண்காட்சி கூடங்களையும் கொண்டுள்ளது.

எமது கடந்தகால பாரம்பரியங்கள் மற்றும் மரபுரிமைகள் பற்றி உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் பாடசாலை பிள்ளைகளுக்கும் விளக்கங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இந்த தொழில்நுட்ப நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

தொழில்நுட்ப கூடத்தின் பௌதீக நிர்மாணப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதுடன், தொல்பொருட்களை காட்சிக்காக வைக்கப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இவ்வளாகத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, அனைத்து நிர்மாணப் பணிகளையும் துரிதகதியில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அதனை தொடர்ந்து அதன் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் குறித்த அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வில் தேசிய தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சனுஜா கஸ்தூரி ஆரச்சி, ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிறி சிறிசேன, மத்திய பொறியியல் ஆலோசனை பணியகத்தின் தலைவர் டி.பி.ஏ.பியதிலக்க ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.