Breaking News
recent

ரவுடிகளின் அட்டகாசத்தை அடக்குமாறு கோப்பாய் பொலிஸாரிடம் பொதுமக்கள் கோரிக்கை.

(-  தங்கராசா ஷாமிலன்.)

கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் அண்மைகாலமாக இடம்பெறும் வாள்வெட்டு அட்டகாசம் ரவுடிஷம் கஞ்சா பாவனையைக் பொலிஸார் கட்டுப்படுத்த வேண்டும் என புதிய செம்மணி வீதி பொது மக்கள் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பிரதேச ஆலயங்கள் பாடசாலை வளாகம் யாரும் கவனிப்பார் அற்ற காணிகள் மற்றும் பழைய வீடுகளில் ரவுடிகள் ஒன்று கூடி கஞ்சாவைப் பாவித்து மது அருந்திவிட்டு  தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபடுவதோடு பொது மக்களை அச்சுருத்திவருகின்றனர்.

ஒன்று கூடும் அனைத்து இளைஞர்களும் வேறு பிரதேசத்தை சேர்ந்ததோடு  சிறு வயதைச்சேர்ந்தவர்கள் இவர்களின் இவ்வாறான செயற்பாட்டால் ஆலயங்களுக்கு சென்று கூட அமைதியாக வழிபடமுடியவில்லை வர்த்தக நிலையங்களுக்கு வீதியால் செல்ல முடியவில்லை வர்த்தக நிலையங்கள் நடத்த முடியவில்லை  பெண்கள் தனியார் கல்விநிலையங்களுக்கு தனியாக செல்லப்பயப்பிடுகின்றார்கள் என பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

புதிய செம்மணி வீதி கிராம சமூக அமைப்புகளிடம் குறித்த பிரச்சனைகள் தொடர்பாக பல முறைப்பாடுகளை வழங்கியும் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்காது அமைதிகாத்துவருவது குறித்து பொது மக்கள் கவலை தெரிவித்ததோடு மேலும் குற்றவாளிகளுக்கு சில தமிழ் பொலிஸார் துனைபோவதாக மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.



Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.