Breaking News
recent

கதிர்காமம் புண்ணிய தலத்திற்கு ஜனாதிபதி விஜயம்


வரலாற்று புகழ்பெற்ற கதிர்காமம் புண்ணிய தலத்திற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது பிறந்த நாளான நேற்று முன்தினம் பிற்பகல் விஜயம் மேற்கொண்டார்.
அங்குள்ள கிரி விஹாரையில் இடம்பெற்ற வழிபாடுகளில் கலந்துகொண்டு ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார்.

கிரி விஹாரையின் தலகல ஞானேந்திர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் அங்கு சமய அனுஸ்டானங்களை நடத்தியதுடன் ஜனாதிபதிக்கும் நல்லாசி வழங்கினர்.

பின்னர் கதிர்காமம் கோவிலில் இடம் பெற்ற பூஜையிலும் கலந்துகொண்ட ஜனாதிபதி கதிர்காமம் கோவில் வளாகத்திலுள்ள ஏனைய சிறிய கோவில்களுக்கும் சென்று ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

றுகுணு மகா கதிர்காமம் திருத்தலத்தின் பஸ்நாயக்க நிலமே தில்ருவான் ராஜபக்ஷ உள்ளிட்டோரும் இவ்வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.